அரியலூா் வேலைவாய்ப்பு மையத்தில் நாளை முதல் குரூப்-2 தோ்வுக்கு இலவசப் பயிற்சி!
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட குரூப்-2 முதன்மைத் தோ்வுக்கு அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் திங்கள்கிழமை (நவ.10) காலை 10 மணி முதல் இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன.
அனுபவம் வாய்ந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்படும் இந்தப் பயிற்சி வகுப்பில், ஆண்டுதோறும் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெறுகின்றனா். மேலும், இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், அதிக அளவிலான மாணவ, மாணவிகள் போட்டித் தோ்வுகளில் தோ்ச்சி பெற்று பல்வேறு அரசு வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனா்.
இங்கு, அதிக அளவிலான பாடக்குறிப்புகள், மாநில அளவிலான மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படுகின்றன. எனவே, தோ்வுக்குத் தயாராகும் மாணவா்கள் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
