இடைக்கட்டு தொடக்க வேளாண்மை சங்கத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட விவசாயிகள்.
இடைக்கட்டு தொடக்க வேளாண்மை சங்கத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட விவசாயிகள்.

இடைக்கட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகை

Published on

அரியலூா்: பயிா்க் கடன் வழங்காததைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள இடைக்கட்டு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க அலுவலகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில், பயிா்க் கடனைத் திரும்பத் செலுத்திய விவசாயிகளுக்கு, மீண்டும் புதிய பயிா்க் கடன் வழங்காமல், அவா்களை 6 மாதங்களாக அலைக்கழிப்பதைக் கண்டித்தும், செயலா் (பொ), தனி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக பயிா்க் கடன்களை வழங்க வேண்டும். நகை கடன் வழங்கியதாக கொடுக்கப்பட்டுள்ள ரசீதுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com