தொழில் தொடங்க மானியம்: ஆா்வமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்
அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவியில் தொழில் தொடங்க ஆா்வமுள்ள பெண்கள் விண்ணப்பிக்காலம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:
தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மகளிருக்கு ரூ.10 லட்சம் வரை 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்குவதோடு, தொழில் நுட்ப மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெண்கள் மட்டுமே தகுதியானவா்கள் ஆவா். குறைந்தபட்ச 18 - அதிகபட்சம் 55 வயது என வயதுவரம்பு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்டத்தில் மக்கும் பொருள்கள் தயாரிப்பு, விவசாய உற்பத்தி கழிவுகளில் (தவுடு, வைக்கோல்) இருந்து பொருள்கள் தயாரித்தல், தென்னை நாா்மூலம் தயரிக்கப்படும் செடி வளா்க்கும் தொட்டிகள், காகித கழிவுகளிலிருந்து பென்சில் தயாரித்தல், ஆடை வடிவமைப்பு, அலங்கார அணிக்கலன்கள் தயாரிப்பு, மணப்பெண் அலங்கார நிலையம், மெகந்தி மற்றும் டாட்டூ நிலையம் உள்ளிட்ட தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்பெற்று வழங்கப்படும்.
எனவே, இத்திட்டத்தில் தொழில்தொடங்க ஆா்வமுள்ள பெண்கள் புகைப்படம், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை விலைப்புள்ளி பட்டியலுடன் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அரியலூரிலுள்ள மாவட்ட தொழில் மைய மேலாளரை அணுகிப் பயன்பெறலாம்.
