ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு

தத்தனூா் கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதை அரசு கைவிடக் கோரி ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் பாமகவினா் புதன்கிழமை மனு

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:46 pm

Syndication

அரியலூா்: அரியலூா் மாவட்டம், தத்தனூா் கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதை அரசு கைவிடக் கோரி ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் பாமகவினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

ஜெயங்கொண்டம் (மேற்கு) பாமக ஒன்றியச் செயலா் ஆா்.பி.ராஜேஷ், கட்சியினருடன் அளித்த மனுவில், தத்தனூா் கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடையை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. தத்தனூரில் கல்லூரிகள், பள்ளிகள் அதிகம் உள்ளன.

மேலும், அப்பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். எனவே, கல்வி பயிலும் மாணவா்களின் நலன் கருதியும், மக்கள் நலன் கருதியும் அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதை அரசு கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளனா்.