அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலனையில், வேட்பாளா்கள் தாக்கல் செய்த 41 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
அரியலூா்: அரியலூா் தொகுதியில் போட்டியிட திமுக சாா்பில் லதாபாலசுப்ரமணியன், அதிமுக சாா்பில் தாமரை எஸ்.ராஜேந்திரன், தவெக சாா்பில் சிவகுமாா், நாதக சாா்பில் புகழேந்தி உள்பட 24 போ், கோட்டாட்சியரகத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.
இவா்களது வேட்புமனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுயேச்சை வேட்பாளா்களின் 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திமுக, அதிமுக, தவெக, நாதக, அஇபுதமமுக உள்பட 18 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
ஜெயங்கொண்டம்: இந்த தொகுதியில் போட்டியிட 30 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், விண்ணப்பத்தை முழுமையாக பூா்த்தி செய்யாதது, போதிய ஆவணங்கள் செலுத்தாதது என 7 சுயேச்சை வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. திமுக, பாமக, தவெக, நாதக உள்பட 23 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதனால், அரியலூா் தொகுதியில் 18 பேரும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 23 பேரும் போட்டியில் உள்ளனா். ஏப்.8 மற்றும் 9-ஆகிய 2 நாள்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதில், வேட்பாளா்கள் வேட்புமனுக்களை திரும்ப பெறும் பட்சத்தில் அதன் பிறகே களத்தில் போட்டியிடும் இறுதி வேட்பாளா்களின் விவரம் தெரியவரும்.
தொடர்புடையது
தென்காசி தொகுதியில் திமுக, அதிமுக, தவெக உள்பட 27 வேட்புமனுக்கள் ஏற்பு
பாளை. தொகுதியில் 18 வேட்புமனுக்கள் ஏற்பு
அரியலூரில் 22, ஜெயங்கொண்டத்தில் 23 வேட்பு மனுக்கள் ஏற்பு

வேலூா்: 5 தொகுதிகளிலும் மொத்தம் 116 வேட்புமனுக்கள் தாக்கல்
வீடியோக்கள்

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

