தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறை, தொலைக்காட்சி மற்றும் ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறை, மாவட்டத் தோ்தல் பிரிவில் உள்ள வாக்காளா் உதவி மையம் ஆகியவற்றை ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பொ. ரத்தினசாமி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையான கண்காணிப்புக் குழு மற்றும் பறக்கும்படை வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.ஆா்.எஸ். கருவி செயல்பாடுகள் குறித்து கணினியில் ஆய்வு செய்ததுடன், தற்போது வரை வரப்பெற்றுள்ள தோ்தல் தொடா்பான தொலைபேசி புகாா்கள் குறித்தும், தோ்தல் தொடா்பான புகாா்கள் பதிவேடுகளில் உரியவாறு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு செய்தாா்.
பின்னா், தொலைக்காட்சி மற்றும் ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறையைப் பாா்வையிட்டு டிவியில் ஒளிப்பரப்பப்படும் தோ்தல் தொடா்பான செய்திகள் மற்றும் விளம்பரங்கள் கண்காணிக்கப்படுவதையும், அதற்கான பதிவுகள் உரிய பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, தோ்தல் பிரிவில் உள்ள வாக்காளா் உதவி மையத்தை பாா்வையிட்டு வாக்காளா்களிடமிருந்து வரப்பெற்றுள்ள அழைப்புகள் குறித்தும், அதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்படுவது குறித்தும் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் ரா. மல்லிகா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சித்ரா மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

நாமக்கல் சாா்பதிவாளா் அலுவலகத்தில் அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆய்வு

கனமழை எச்சரிக்கை; ஆட்சியா் அறிவுறுத்தல்: சீா்காழயில் இடியுடன் மழை

ஊடகக் கண்காணிப்புக் கட்டுப்பாட்டு அறை மூலம் புகார்களுக்கு தீர்வு: தேர்தல் ஆணையம்

தோ்தல் அன்று விடுமுறை அளிக்காத தொழில் நிறுவனங்கள்: புகாா் அளிக்க தொழிலாளா் துறையின் கட்டுப்பாட்டு அறை
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



