ஊடகக் கண்காணிப்புக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, அதன் மூலம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நான்கு தேர்தல் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன:
ஊடகக் கண்காணிப்புக் கட்டுப்பாட்டு அறை:
மாநில ஊடகக் கட்டுப்பாட்டு அறையானது 2 மாவட்ட வருவாய் அலுவலர்கள் (DROs) மற்றும் 2 துணை ஆட்சியர்கள் உள்பட 15 பேர் கொண்ட குழுவுடன் இயங்கி வருகிறது. இந்தக் குழுவினர் அச்சு ஊடகம், மின்னணு ஊடகம் மற்றும் சமூக ஊடகத் தளங்களைக் கண்காணித்து, தேர்தல் நடத்தை விதிகள் (MCC) மீறல், எதிர்மறையான அல்லது தவறான செய்திகள், வெறுப்புப் பேச்சு, கட்டணச் செய்திகள் (Paid News) மற்றும் பிற ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்கள் குறித்துக் கண்காணிக்கின்றனர்.
அவற்றைச் சரிபார்த்து, தேவையான நடவடிக்கைக்காக ஊடகக் கண்காணிப்பு (Media Tracker) இணையதளம் வழியாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாகத் தெரிவிக்கின்றனர். இன்று(ஏப். 22) வரை, 437 சமூக ஊடகப் புகார்கள், 129 அச்சு ஊடகப் புகார்கள் மற்றும் 100 மின்னணு ஊடகப் புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளன.
வாகனக் கண்காணிப்பு மற்றும் சிவிஜில் புகார்களுக்கான 24X7 ஜிபிஎஸ் (GPS) கட்டுப்பாட்டு அறை:
இரண்டு மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில் 30 நபர்களைக் கொண்ட குழுவுடன் கூடிய இணையவழி நேரடி கண்காணிப்புக் கட்டுப்பாட்டு அறை, பறக்கும் படை வாகனங்கள் / நிலையான கண்காணிப்புக் குழுக்களின் வாகனங்கள், காணொளி கண்காணிப்புக் குழு வாகனங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM)/ வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரி பார்க்கும் கருவிகள் (VVPAT) கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் மண்டலக் குழு வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் (GPS) அடிப்படையிலான வாகனக் கண்காணிப்பு அமைப்பை கண்காணிக்கவும், சிவிஜில் (cVIGIL) புகார்களைக் கண்காணிக்கவும் 15.03.2026 முதல் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மேலும், மாவட்டங்களில் தேர்தல் செலவினக் கண்காணிப்பு தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்கவும் இந்த அறை செயல்படுகிறது. 21.04.2026 நிலவரப்படி, 5859 புகார்கள் பெறப்பட்டு அவை முடித்து வைக்கப்பட்டுள்ளன.
மாநிலத் தொடர்பு மையம் (SCC):
மாநிலத் தொடர்பு மையம் (24 X 7) 30 பேர் கொண்ட குழுவுடன் 180042521950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் புகார்களைப் பெற இயங்கி வருகிறது. இதேபோன்ற அமைப்பு மாவட்டங்களில் “மாவட்டத் தொடர்பு மையம் 1950” என்ற பெயரில் கட்டணமில்லா தொலைபேசி எண் (மாவட்ட எஸ்.டி.டி குறியீட்டுடன் சேர்த்து) 1950 ல் இயங்குகிறது. இதுவரை சுமார் 21657 புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளன.
தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) அலுவலகக் கட்டுப்பாட்டு அறை:
முதன்மை கட்டுப்பாட்டு அறை 20.04.2026 முதல் 18 மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் அவர்களது குழுவினருடன் தேர்தல் பணிகளுக்காகச் செயல்படத் தொடங்கியுள்ளது. இவர்கள் 75064 வாக்குச் சாவடிகளில் செய்யப்பட்டுள்ள நேரடி இணைய ஒளிபரப்பு (Live Webcasting) ஏற்பாடுகள் மூலம் (வாக்குச் சாவடிக்கு உள்ளே 1 மற்றும் வெளியே 1 என மொத்தம் 1,50,128 காணொலிக் கருவி) தேர்தல் நாள் நடவடிக்கைகளைக் கண்காணிப்பார்கள்.
மேலும், மாவட்டங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் / தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமிருந்து அறிக்கைகளைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கனமழை எச்சரிக்கை; ஆட்சியா் அறிவுறுத்தல்: சீா்காழயில் இடியுடன் மழை

தோ்தல் அன்று விடுமுறை அளிக்காத தொழில் நிறுவனங்கள்: புகாா் அளிக்க தொழிலாளா் துறையின் கட்டுப்பாட்டு அறை

கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாக புகாா்: தோ்தல் அதிகாரி மறுப்பு

தோ்தல் கட்டுப்பாட்டு அறை, தோ்தல் வாக்காளா் உதவி மையத்தில் ஆய்வு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

