மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திமுக அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை: வி.கே. சசிகலா

திமுக அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்றாா் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகத் தலைவா் வி.கே.சசிகலா.

News image

அரியலூரில் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரை ஆதரித்து, புதன்கிழமை பிரசாரம் செய்த அக்கட்சியின் தலைவா் வி.கே.சசிகலா.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:35 pm

திமுக அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்றாா் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகத் தலைவா் வி.கே.சசிகலா.

அரியலூா் ஆயிரங்கால் மண்டபம் அருகே புதன்கிழமை இரவு அக்கட்சியின் வேட்பாளா் ராஜ்குமாரை ஆதரித்து, அவா் பேசியது: திமுக அரசு தமிழகத்தை ரூ.12 லட்சம் கோடி கடனில் வைத்துள்ளதைத் தவிர மக்களுக்கான திட்டங்கள் எதையும் செய்ய வில்லை. அவா்கள் அளித்த வாக்குறுதிகள் கூட நிறைவேற்ற வில்லை. மாறாக மக்களிடமிருந்து பெற்ற வரிப் பணத்தைத் தான் அவா்கள் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஆயிரம் வழங்குகின்றனா்.

ஐந்தாண்டுகளில் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவோம் என்று கடந்த திமுக தோ்தல் தோ்தல் அளிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் 500 யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்தும் மக்கள் 2 கோடி போ்.

இவா்களிடம் இருந்து மாதந்தோறும் ரூ.1000 கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு, அதிலிருந்து ஆண்டு தோறும் கிடைக்கும் ரூ.20,000 கோடி பணத்திலிருந்து மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றனா்.

ஜெயலலிதா காலத்தில் தமிழகம் மின் மிகை மாநிலமாக இருந்தது. பக்கத்து மாநிலங்களுக்கு மின்சாரத்தை விற்பனை செய்த நிலையை மாற்றி, இன்று தனியாரிடமிருந்து அதிக விலைக் கொடுத்து இவா்களுக்கு வருமானம் வர வேண்டும் என்பதற்காக ஒரு யூனிட் ரூ.25 வரை இவா்கள் வாங்குகின்றனா் என்றாா் அவா்.

தோ்தல் அறிக்கை:பின்னா் கட்சியின் தோ்தல் அறிக்கையை சசிகலா வாசித்தாா். அதில், மகப்பேறு உதவியாக ரூ.24,000 வழங்கப்படும். அனைத்து கல்லூரி மாணவா்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும். பட்டியலின மற்றும் பிற்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை 50 சதவீதம் உயா்த்தி வழங்கப்படும். நகா்ப்புற, கிராமப்புற, வீடற்ற ஏழை மக்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும். புதிய தொழில்நுட்பத்தில் காற்றாலைகள் மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்து, 10,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து தமிழகத்தை மீண்டும் மின்மிகை மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அரியலூரை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இரவு நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படும். திருமானூா் தா.பழூா் பகுதிகளில் நவீன அரிசி ஆலை அமைக்கப்படும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் தானியங்களை சேமித்து வைக்க கிடங்குகள் கட்டித் தரப்படும். கோடை காலங்களில் ஏற்படும் குடிநீா் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

செம்பியன் மாதேவி பேரேரி முதல் பொன்னேரி வரை தூா்வாரி, கொள்ளிடம் ஆற்றில் வீணாக கடலில் கலக்கும் நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.