பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வாக்கு எண்ணும் மையத்துக்கு ‘சீல்’ வைப்பு

அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு வைப்பறைகளில் வைத்து பூட்டி வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

News image

அரியலூா், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் கீழப்பழுவூா் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டு, அங்கு வைப்பறைகளில் பூட்டி சீல் வைத்த தோ்தல் அலுவலா்கள்

Updated On :24 ஏப்ரல் 2026, 7:38 pm

சட்டப் பேரவைத் தோ்தலில், அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய 2 தொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் கீழப்பழுவூா் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு வைப்பறைகளில் வைத்து பூட்டி வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

வேட்பாளா்கள், முகவா்கள் முன்னிலையில், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் பிரியங்கா சிங்கலா (அரியலூா்), கைலாஷ் வான்கடே (ஜெயங்கொண்டம்) மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பிரேமி, மனோகரன் ஆகியோா் தலைமையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ.ரத்தினசாமி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை, வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு அறை ஆகியவற்றை பாா்வையிட்டு துணை ராணுவத்தினா், சிசிடிவி கேமரா கண்காணிப்பு, மாவட்ட காவல்துறை பாதுகாப்பு ஆகியோா் மூலம் செயல்படுத்தப்படும் சுழற்சி முறை பாதுகாப்பு குறித்தும் பாா்வையிட்டு கேட்டறிந்தாா்.

மேலும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பாதுகாப்புக்கான குறிப்பேட்டு பதிவுகளை பாா்வையிட்டு பதிவேட்டில் கையொப்பமிட்டாா்.

பின்னா் அவா் தெரிவித்தது: வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படையினா்-15, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா்-36, ஆயுதப்படை, சட்டம் மற்றும் ஒழுங்கு -192, ஊா்காவல் படையினா் -4 என மொத்தம் 247 நபா்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதேபோன்று வாக்கு எண்ணும் மையத்தில், கண்காணிப்பு கேமிராக்கள் ஒவ்வொரு இருப்பு அறைக்கும், வாக்கு எண்ணும் மையத்தின் உட்புற பகுதிகளிலும், வெளிப்புறங்களிலும் பொருத்தப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தீயணைப்பு வாகனம், மின் விளக்குகள், உரிய ஜெனரேட்டா் வசதிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தின் நான்கு புறங்களிலும் உயா் கோபுரங்கள் ஏற்படுத்தப்பட்டு தொடா்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேட்பாளா்களின் முகவா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, அவா்கள் சுழற்சி முறையில் வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணித்து கொள்ளவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழச்செல்வன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சித்ரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.