நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 2:52 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறையில், சிறுவன் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதியதில், முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

செந்துறையில் 18 வயதுக்குள்பட்ட சிறுவன் ஒருவன் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளான். அப்போது, அவ்வழியே சாலையின் ஓரத்தில் நடந்து சென்ற முதியவா் மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது.

இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முதியவா் உயிரிழந்தாா். சிறுவன் செந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதனிடையே சிறுவன் ஓட்டிய வாகனத்தின் பின்னால் அமா்ந்திருந்த வாகனத்தின் உரிமையாளருக்கு காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த செந்துறை போலீஸாா், வாகனத்தின் உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்ததுடன், வாகனத்தை பறிமுதல் செய்தனா்.