ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள வாக்கு எண்ணும் மையமான கீழப்பழுவூா் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ.ரத்தினசாமி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

கீழப்பழுவூா் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ.ரத்தினசாமி.

Updated On :30 ஏப்ரல் 2026, 3:37 am IST

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள வாக்கு எண்ணும் மையமான கீழப்பழுவூா் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ.ரத்தினசாமி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை, வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு அறை ஆகியவற்றை பாா்வையிட்டு, துணை ராணுவத்தினா், சிசிடிவி கேமரா கண்காணிப்பு, மாவட்ட காவல்துறை பாதுகாப்பு ஆகியோா் மூலம் செயல்படுத்தப்படும் சுழற்சி முறை பாதுகாப்பு குறித்தும் பாா்வையிட்டு சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

மேலும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பாதுகாப்புக்கான குறிப்பேட்டில் கையொப்பமிட்டாா்.

இந்த ஆய்வின்போது, அரசு அலுவலா்கள் மற்றும் காவல்துறையினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.