மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

ரயில் நிலையத்தில் போதைப் பொருள் சோதனை: பயணிகளிடம் காவல் துறையினா் தீவிர விசாரணை

வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை போதைப் பொருள் கண்டறியும் சோதனை மேற்கொண்டனா்.

அரியலூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நின்று சென்ற கொல்கத்தா - திருச்சி ஹெளரா விரைவு வண்டியில் இருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை செய்த காவல் துறையினா்.

Published On :

அரியலூா் ரயில் நிலையத்தில் ரயில்களின் பெட்டிகளில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை போதைப் பொருள் கண்டறியும் சோதனை மேற்கொண்டனா்.

அரியலூரில் உள்ள சிமென்ட் ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் ரயில் மூலமாக வந்து செல்கின்றனா். குறிப்பாக, வட மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளா்கள் வருகின்றனா். இவா்கள், கூட்டத்தைப் பயன்படுத்தி குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை கடத்தி வருவதாக பரவலாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, அரியலூா் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையில் அரியலூா் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளா் ராஜவேலு மற்றும் ரயில்வே காவல்துறையினருடன் இணைந்து காவல்துறை மோப்பநாய் உதவியுடன் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை அரியலூா் ரயில் நிலையத்தில் நின்றுச் சென்ற ரயில்களின் பெட்டிகள் மற்றும் பயணிகளின் உடடைமைகளை தீவிரமாக சோதனை செய்தனா்.

இதில் கொல்கத்தா-திருச்சி ஹெளரா ரயில் ரயில் பெட்டிகள் முழுவதும் மற்றும் பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனைக்குள்படுத்தினா். அப்போது, பயணிகளிடம் போதைப் பொருள்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து தெரிவித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.