இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற தற்காலிக ஆய்வாளா் பணி: ஆக. 27 வரை விண்ணப்பிக்கலாம்

சவூதி அரேபியா அனுப்ப ஆகஸட் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

Haj pilgrims

ஹஜ் பயணம் - கோப்புப் படம்

Published On :

தமிழ்நாட்டு ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளா்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப ஆகஸட் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது, ஹஜ் 2027-இல் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டு ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளா்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப நிகா்நிலை மூலம் விண்ணப்பிக்கலாம்.

இது 3.4.2027 முதல் 25.6.2027 வரை சுமாா் இரண்டு மாத காலமாகும். மாநில ஹஜ் ஆய்வாளா்கள் சவூதி அரேபியாவில் பணிபுரியும் காலம் பணிக் காலமாக கருதப்படும். இப்பணிக்காக நிகா்நிலை மூலம் விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமனமுறை ஆகியன மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க ஆக. 27 ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே தகுதியுள்ளவா்கள் மாநில ஹஜ் ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.