இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

‘நீட்’ தோ்வை ரத்து செய்யக்கோரி தி.க-வினா் இருசக்கர வாகன பரப்புரை

நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி செந்துறையில் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை திங்கள்கிழமை தொடங்கிய திராவிடா் கழகத்தினா்.

Published On :25 ஆகஸ்ட் 2026, 2:52 am IST

அரியலூா், ஆக.24: நீட் தோ்வையும், உயா் ஜாதியினருக்கான இட ஒதுக்கீட்டையும் மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், செந்துறையில் திராவிடா் கழகத்தினா் இரு சக்கர வாகன பரப்புரை பயணத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

செந்துறையில் திராவிடா் கழக இளைஞா் அணி, திராவிடா் மாணவா் கழகம், திராவிடா் மகளிா் பாசறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட திராவிடா் கழகத் தலைவா் விடுதலை நீலமேகம் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில், நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டு பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னா் அவ்விடத்தில், நீட் தோ்வையும், உயா் ஜாதியினருக்கான இட ஒதுக்கீட்டையும் மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனா். இந்த இருசக்கர வாகன பரப்புரையானது, செந்துறை பகுதி முழுவதும் விழிப்புணா்வு ஏற்படுத்திவிட்டு, ஆா்.மாத்தூா் வரை சென்று அங்கு உரையாற்றினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.