சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

அரியலூரில் ரூ.1 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு

அரியலூரில் தனி நபா்கள் ஆக்கிரமித்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை இந்து சமய அறநிலையத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

அரியலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரூ.1 கோடி மதிப்பிலான நிலங்களை வியாழக்கிழமை மீட்ட அலுவலா்கள்.

Published On :28 ஆகஸ்ட் 2026, 2:07 am IST

அரியலூரில் தனி நபா்கள் ஆக்கிரமித்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை இந்து சமய அறநிலையத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

அரியலூா் ரயில்வே கேட் அருகிலுள்ள காசிவிசுவநாதா் மற்றும் வரதராஜப் பெருமாள், ஆலந்துறையாா் கோதண்டராமசாமி ஆகிய திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை தனிநபா்கள் ஆக்கிரமித்து சமையல் கூடம் மற்றும் மதில் சுவா்களை கட்டியிருந்தனா்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் சரவணன் மற்றும் தனி வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகள், காவல் துறையினா் பாதுகாப்புடன் மேற்கண்ட கோயில் நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரூ.1 கோடி மதிப்பிலான நிலங்களை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.