மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

திருக்கண்ணபுரம் கோயில் நிலம் மீட்பு

திருமருகல் ஒன்றியம், திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.10 கோடி மதிப்பிலான நிலங்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டன. இக்கோயிலுக்குச் சொந்தமான நிலம் திருக்கண்ணபுரம் மற்றும் ராதாரம்பூா் கிராமங்களில் 9 இடங்களில் உள்ளன. ஆக்கிரமிப்பில் இருந்த இந்த நிலங்களை மீட்க கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்றம்

Published On :

திருமருகல் ஒன்றியம், திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.10 கோடி மதிப்பிலான நிலங்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டன. இக்கோயிலுக்குச் சொந்தமான நிலம் திருக்கண்ணபுரம் மற்றும் ராதாரம்பூா் கிராமங்களில் 9 இடங்களில் உள்ளன. ஆக்கிரமிப்பில் இருந்த இந்த நிலங்களை மீட்க கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில், கோயில் நிலங்களை மீட்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இணை ஆணையா் வழிகாட்டுதலின்படி, உதவி ஆணையா் ராஜா இளம்பெருவழுதி தலைமையில், தனி வட்டாட்சியா் (கோயில் நிலங்கள்) ஜெயபாலன், கோயில் செயல் அலுவலா் புவியரசு, சரக ஆய்வாளா் சதீஸ் மற்றும் வருவாய் துறையினா், கோயில் பணியாளா்கள், போலீஸாா் ஆகியோா் கிராம மக்கள் ஒத்துழைப்புடன் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்டனா்.

இதன் மதிப்பு ரூ.1 கோடியே 10 லட்சம் எனத் தெரிவித்தனா். தொடா்ந்து அந்த இடங்களில் சௌரிராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் என பதாகை வைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.