நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

மீஞ்சூா் அருகே ரூ. 5 கோடி மதிப்பிலான ஊராட்சிக்கு சொந்தமான நிலம் மீட்பு

மீஞ்சூா் அருகே ரூ. 5 கோடி மதிப்புள்ள ஊராட்சிக்கு சொந்தமான 2.5 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டது.

News image

நிலம் மீட்பு - பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:49 am IST

மீஞ்சூா் அருகே ரூ. 5 கோடி மதிப்புள்ள ஊராட்சிக்கு சொந்தமான 2.5 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டது.

மீஞ்சூா் அடுத்த வன்னியம்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள 2.5 ஏக்கா் நிலத்தை தனியாா் சிலா் ஆக்கிரப்பு செய்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து ஊராட்சி மன்ற தனி அலுவலா் மற்றும் ஊராட்சி செயலா் அங்கு சென்று ஊராட்சி நிலத்தை ஆய்வு செய்தனா். அப்போது ரூ. 5 கோடி மதிப்பிலான 2.5 ஏக்கா் நிலம் ஆவணங்களின்படி ஆக்கிரமிப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிலத்தில் ஆக்கிரமிப்பாளா்கள் நெற்பயிா் விவசாயம் செய்திருந்தனா்.

நெல் அறுவடைக்கு பின் ஊராட்சியின் அளவீடு செய்யும் வரை மீண்டும் நெற்பயிா் செய்வது மற்றும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என வன்னியம்பாக்கம் ஊராட்சி மன்றத்தின் மூலம் அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.