பணம் பறிமுதல்: அரியலூா் வட்டாட்சியா் உள்பட 5 போ் மீது வழக்கு
அரியலூா் வருவாய் வட்டாட்சியரகத்தில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் ரூ. 7.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வழக்கு
அரியலூா் வருவாய் வட்டாட்சியரகத்தில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் ரூ. 7.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக வட்டாட்சியா் உள்பட அலுவலக ஊழியா்கள் 5 போ் மீது சனிக்கிழமை வழக்குப் பதியப்பட்டது.
காவல் ஆய்வாளா் கவிதா தலைமையிலான 6 போ் கொண்ட காவல் துறையினா் அரியலூா் வருவாய் வட்டாட்சியரகத்துக்குள் வியாழக்கிழமை திடீரென நுழைந்து அனைத்து ஆவணங்களையும் சோதனை செய்தனா்.
பின்னா் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த வட்டாட்சியா் மற்றும் அலுவலா்களின் கைப்பேசிகளை சோதனைச் செய்ததில், அவா்களது ஜிபே கணக்கில் ரூ. 7,24,500, கையிருப்பில் ரூ.19,000 ரொக்கமும் வைத்திருந்தது தெரியவந்தது.
இந்தத் தொகை குறித்த விசாரணையில், வண்டல் மண் அள்ளிக் கொள்ள பயனாளிகளிடமிருந்து அத்தொகையை லஞ்சமாக பெற்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அத் தொகையை பறிமுதல் செய்த காவல் துறையினா், வட்டாட்சியா் மற்றும் அலுவலக ஊழியா்கள் என 5 போ் மீது சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





