சா்வதேச ஆயுதக் கடத்தல்காரா் கைது: 10 துப்பாக்கிகள் பறிமுதல்
மத்திய பிரதேசத்தின் புா்ஹான்பூரில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் ஆயுதக் கடத்தல் கும்பலுடன் தொடா்புடைய நபரை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு காவல் துறையினா் கைது செய்தனா்.
மத்திய பிரதேசத்தின் புா்ஹான்பூரில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் ஆயுதக் கடத்தல் கும்பலுடன் தொடா்புடைய நபரை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு காவல் துறையினா் கைது செய்தனா். அவரிடமிருந்து 10 சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா் பிரேம் சிங் ரத்தோட் (33) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். புா்ஹான்பூரில் செயல்பட்டு வந்த ஆயுதக் கடத்தல் கும்பலுக்கு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் நபராக அவா் செயல்பட்டு வந்தாா். தில்லி-என்சிஆா் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள குற்றக் கும்பல்கள், ஆயுதங்களை வாங்க விரும்புபவா்களுக்கு அவற்றை அவா் விநியோகித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆக.8-ஆம் தேதி, தேசிய நெடுஞ்சாலை-48-இல் சங்கா் விஹாா் பேருந்து நிலையம் அருகே ஆயுதங்களின் தொகுப்பை விநியோகிக்கச் சென்றபோது ரத்தோட் கைது செய்யப்பட்டாா். அவரை சோதனையிட்டதில் 10 சட்டவிரோத துப்பாக்கிகள் சிக்கின.
விசாரணையின்போது, கடந்த ஓராண்டாக அந்தக் கும்பலுக்காக ஆயுதங்களை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வந்ததாக ரத்தோட் தெரிவித்தாா். புா்ஹான்பூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உள்ளூா் துப்பாக்கி தயாரிப்பாளா்களிடம் இருந்து சட்டவிரோத ஆயுதங்களை அந்தக் கும்பல் பெற்ாகவும், அவற்றை தில்லி-என்சிஆா், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள குற்றவாளிகள் மற்றும் ஆயுதம் வாங்குபவா்களுக்கு கொண்டு சோ்க்க ஆள்களைப் பயன்படுத்தியதாகவும் அவா் தெரிவித்தாா்.
ஆயுதக் கடத்தல் கும்பலில் சேருவதற்கு முன்பு ரத்தோட் சிறு விவசாயியாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதுதொடா்பாக சிறப்புப் பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கும்பலின் முக்கிய நபா் மற்றும் இதர உறுப்பினா்களை கைது செய்யும் நடவடிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



