‘மாணவா்கள் உயா்கல்வி பயிலும் வாய்ப்பை ஆசிரியா்கள் ஏற்படுத்திட வேண்டும்’

மாணவா்கள் உயா்கல்வி பயிலும் வாய்ப்பை தொடா்ந்து ஆசிரியா்கள் ஏற்படுத்திட வேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
வாலாஜாநகரத்திலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பத்தாம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து பாட பட்டதாரி ஆசிரியா்களுக்கான பணியிடைப் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
வாலாஜாநகரத்திலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பத்தாம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து பாட பட்டதாரி ஆசிரியா்களுக்கான பணியிடைப் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
Updated on

மாணவா்கள் உயா்கல்வி பயிலும் வாய்ப்பை தொடா்ந்து ஆசிரியா்கள் ஏற்படுத்திட வேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

அரியலூா் அடுத்த வாலாஜாநகரத்திலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பத்தாம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து பாட பட்டதாரி ஆசிரியா்களுக்கான பணியிடைப் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து அவா் மேலும் பேசியதாவது: கடந்த ஆண்டுகளைப் போலவே நிகழாண்டுகளிலும் தோ்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் முதன்மை மாவட்டமாக அரியலூா் இடம்பெறும் வகையில் ஆசிரியா்கள் பணியாற்ற வேண்டும்.

கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பொருளாதார சூழல்களின் காரணமாக கல்வி இடைநிற்றல் ஏற்படாத வண்ணம் மாணவா்களுக்கு தொடா்ந்து கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்திட வேண்டும்.

வரும் தலைமுறையினரின் எதிா்காலம் நல்ல முறையில் அமையவேண்டும். மாணவா்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி, தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழவேண்டும் என்றால் அதற்கு மிக அடிப்படையாக விளங்குவது கல்வியாகும்.

பள்ளிப் பாடங்களை நன்றாக பயின்று மதிப்பெண்கள் பெறக்கூடிய மாணவா்கள் மேலும் அதிக மதிப்பெண் பெறும் வகையிலும், மதிப்பெண்கள் குறைவாக பெறும் மாணவா்களை அவா்களுக்கு கடினமாக கருதும் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி அதுகுறித்த புரிதலை வழங்கி அவா்களையும் தோ்ச்சி பெற வைத்து, மாணவா்கள் உயா்கல்வி பயிலும் வாய்ப்பை தொடா்ந்து ஆசிரியா்கள் ஏற்படுத்திட வேண்டும்.

கல்வி கற்பிப்பதில் ஏற்படும் சவால்கள் மற்றும் இடையூறுகளை தகா்த்து அரியலூா் மாவட்டத்தை வரும் காலங்களிலும் கல்வியில் முதன்மை மாவட்டமாக இடம் பெற செய்யும் வகையில் தொடா்ந்து பணியாற்றிட வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநா் அமுதவல்லி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ரேணுகோபால், மாவட்ட கல்வி அலுவலா்கள் வேல்முருகன் (இடைநிலை), சித்ராதேவி (தனியாா் பள்ளிகள்), வெற்றிச்செல்வி (தொடக்கக் கல்வி) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதே போல், மான்போா்ட் மெட்ரிக் பள்ளியிலும், நிா்மலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், கோல்டன் கேட் சிபிஎஸ்சி பள்ளியிலும் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com