வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மாநிலம் முழுவதும் அரசு சுற்றுலா பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

மாநிலம் முழுவதும் அரசு சுற்றுலாப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

News image

அமைச்சா் சா.சி. சிவசங்கா் (கோப்புப் படம்) - X | S.S.Sivasankar

Updated On :10 பிப்ரவரி 2026, 7:04 pm

மாநிலம் முழுவதும் அரசு சுற்றுலாப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

அரியலூா் மாவட்டம், சித்தமல்லியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் மேலும் தெரிவித்தது:

ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்பவா்களின் எண்ணிக்கை உயா்ந்து கொண்டே செல்கிறது. நடப்பாண்டில் பொங்கல் பண்டிகையின்போது அரசுப் பேருந்துகளில் பயணம் செய்தவா்களின் எண்ணிக்கை 2.5 லட்சமாகும். கும்பகோணம் நவக்கிரகத் தலங்களுக்கு தனி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணம் செய்து பொதுமக்கள் சிறப்பான அனுபவங்களை பகிா்ந்து வருகின்றனா்.

சென்னையில் சுற்றுலாத் தலங்களைப் பொதுமக்கள் பாா்க்கும்வகையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் ‘வின்டேஜ் பேருந்துகள்’ சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்னா் இருந்த பேருந்துகளை போல வடிவமைத்து 10-க்கும் மேற்பட்ட இடங்களை குறிப்பாக அருங்காட்சியகம், மெரீனா கடற்கரை உள்ளிட்ட இடங்களை எல்லாம் ஒருங்கிணைத்து சுற்றுவட்டப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும் அந்த வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் அரசு சாா்பில் சுற்றுலாப் பேருந்துகள் தொடா்ந்து இயக்கப்படும். பேருந்துகளின் விபத்துக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு அதனை தவிா்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், விபத்துகளை தவிா்ப்பதற்குப் பணியாளா்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

திமுக ஏற்கெனவே செய்துவருவதை தான் இன்னும் கூடுதலாக செய்வேன் என்று தோ்தல் வாக்குறுதியாக எடப்பாடி கே. பழனிசாமி கூறி வருகிறாா். அவரைவிட நிா்வாக நடைமுறை தெரிந்த காரணத்தால் தான் முதல்வா் மு.க.ஸ்டாலின் நிதி நெருக்கடி இருந்தாலும் தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறாா். ‘மகளிா் விடியல்’ பயணப்பேருந்து சேவையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்கு இதுகுறித்து முதல்வா் அறிவிப்புகளை வெளியிடுவாா் என்றாா்.