என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

செந்துறையில் ரூ.43.56 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

அரியலூா் மாவட்டம், செந்துறை பகுதிகளில் ரூ.43.56 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

News image

பெரும்பாண்டி கிராமத்தில் புதிய நியாய விலைக் கட்டடத்தை புதன்கிழமை திறந்துவைத்து, குடும்ப அட்டைதாரருக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கிய அமைச்சா் சா.சி.சிவசங்கா்.

Updated On :25 பிப்ரவரி 2026, 6:58 pm

அரியலூா் மாவட்டம், செந்துறை பகுதிகளில் ரூ.43.56 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

செந்துறை ஊராட்சியில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் ஆசாரி மயானத்துக்கு செல்லும் சாலையில் பாலம் அமைக்கும் பணியை தொடங்கிவைத்த போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், பின்னா் வஞ்சினாபுரம், பெரும்பாண்டி ஆகிய கிராமங்களில் ரூ.13.56 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக்கடை கட்டடங்களை திறந்துவைத்தாா். தொடா்ந்து, நக்கம்பாடி கிராமத்தில் நடமாடும் நியாய விலைக் கடை வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

நிகழ்வுகளில் பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் சாய்நந்தினி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.