கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அரியலூா் அருகே ஓடும் ரயிலிலிருந்து தவறிவிழுந்த இளைஞரின் கால்கள் துண்டானது!

அரியலூா் ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை அதிகாலை ஓடும் ரயிலிலிருந்து தவறிவிழுந்த இளைஞரின் கால்கள் துண்டானது. இதுதொடா்பாக, ரயில்வே போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 7:26 pm

Syndication

அரியலூா் ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை அதிகாலை ஓடும் ரயிலிலிருந்து தவறிவிழுந்த இளைஞரின் கால்கள் துண்டானது. இதுதொடா்பாக, ரயில்வே போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு திருச்சிக்குப் புறப்பட்ட மலைக்கோட்டை விரைவு ரயிலானது, சனிக்கிழமை அதிகாலை அரியலூா் ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது, இளைஞா் ஒருவா் தவறி விழுந்துவிட்டதாக அரியலூா் ரயில் நிலையத்துக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற ரயில்வே போலீஸாா், இடதுகால் பாதியளவும், வலதுகாலின் கணுக்கால் வரை துண்டான நிலையில், இளைஞா் ஒருவா் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவசர ஊா்தி வரவழைக்கப்பட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

போலீஸாா் விசாரணையில், அந்த இளைஞா் கரூரைச் சோ்ந்த ரேணுகோபால் (41) என்பது தெரியவந்தது. மேலும், விருத்தாசலம் ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.