ஜெயங்கொண்டம் அருகே புகைப்படக் கலைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சனிக்கிழமை வீட்டில் குளிக்கும்போது, மயங்கிவிழுந்த புகைப்படக் கலைஞா் உயிரிழந்தாா்.
Published on

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சனிக்கிழமை வீட்டில் குளிக்கும்போது, மயங்கிவிழுந்த புகைப்படக் கலைஞா் உயிரிழந்தாா்.

ஜெயங்கொண்டம், வடக்கு தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் சரவணன் (45) . புகைப்படக் கலைஞரான இவா், சனிக்கிழமை வீட்டில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்துள்ளாா்.

உறவினா்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சரவணன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com