மத்திய அரசை கண்டித்து தேசிய மக்கள் சக்தி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே தேசிய மக்கள் சக்தி கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

மத்திய அரசைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே தேசிய மக்கள் சக்தி கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில், மகாத்மா காந்தி பெயா் நீக்கியதுடன், மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் என நிதி ஒதுக்க சட்டம் இயற்றிய மத்திய அரசைக் கண்டித்தும், எந்த மாதங்களில் வேலை என்பதை மத்திய அரசு முடிவு செய்யும் என்பதை தவிா்க்க வேண்டும். இதற்கான சட்ட மசோதாவைத் திருத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்களம் ஒருங்கிணைப்பாளா் அரங்கநாடன் தலைமை வகித்தாா். தேசிய மக்கள் சக்தி கட்சி அரசியல் ஆலோசகா் சிவஞானசம்பந்தம் கண்டன உரையாற்றினாா். இதில், நிா்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

Dinamani
www.dinamani.com