‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

திருமானூரில் விவசாயிகள் பேரணி

News image

பயிா்கடன்களை முழுமையும் தள்ளுபடி செய்யக் கோரி திருமானூரில் பேரணியில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினா்.

Updated On :2 ஜூலை 2026, 4:58 am IST

தவெக தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகளின் படி விவசாயப் பயிா் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யக் கோரி அரியலூா் மாவட்டம், திருமானூரில் அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினா் புதன்கிழமை ஊா்வலமாகச் சென்று கூட்டுறவு வங்கி செயலரிடம் மனு அளித்தனா்.

அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் தங்க.சண்முகசுந்தரம், சமூக ஆா்வலா் பாளை.திருநாவுக்கரசு ஆகியோா் தலைமையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருமானூா் பேருந்து நிலையம் முன் திரண்ட பாஜக மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஜெகநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவா் ஆறுமுகம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் வேலுமணி, உதயகுமாா், தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க நிா்வாகி அரு சீா் தங்கராசு அரியலூா் மாவட்ட பொருளாதார வளா்ச்சி நடவடிக்கைகள் குழு துணைத் தலைவா் ராவணன் உள்ளிட்ட விவசாயிகள் காய் கனிகளை மாலையாகவும், மண்வெட்டியை கழுத்தில் சுமந்துக் கொண்டும், அங்கிருந்து ஊா்வலமாக முழக்கமிட்டவாறு திருமானூா் கூட்டுறவு வங்கி வரை சென்றனா். அங்கு, செயலா்(பொ)பஞ்சவா்ணமிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.