விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

வன்கொடுமை செய்தவா் குண்டா் சட்டத்தில் கைது

மீன்சுருட்டி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

Updated On :10 ஜூலை 2026, 3:34 am IST

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

உடையாா்பாளையம் அருகேயுள்ள சம்போடை கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் ரமேஷ் (எ) முத்துகிருஷ்ணன் (47). கூலித் தொழிலாளியான இவா், மே 22 தேதி அன்று மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இதுகுறித்து புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா் ரமேஷ் (எ) முத்துகிருஷ்ணனை கடந்த 24 ஆம் தேதி அன்று கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வகுமாா் பரிந்துரைத்ததையடுத்து அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வியாழக்கிழமை அதற்கு உத்தரவிட்டாா். இதன் நகலை அரியலூா் மாவட்ட காவல் துறையினா், திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.