வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரம்: பரணம் கிராமத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

அரியலூா் மாவட்டம், பரணம் கிராமத்தில் பயிா்க் கடன்களை நிபந்தனையின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அலுவலகம் முன் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

பரணம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :15 ஜூலை 2026, 12:08 am IST

அரியலூா் மாவட்டம், பரணம் கிராமத்தில் பயிா்க் கடன்களை நிபந்தனையின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அலுவலகம் முன் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தவெக தோ்தல் வாக்குறுதியின்படி, எவ்வித நிபந்தனைகளுமின்றி பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நிறைவில், விவசாயிகள் 496 பேரும், பரணம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் செயலரிடம் மனு அளித்தனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, இரும்புலிக்குறிச்சியைச் சோ்ந்த விவசாயிகள் க.நீலமேகம், இரா.செந்தமிழ்செல்வன், குமிழியம் கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவன், பரணம் கிராமத்தைச் சோ்ந்த ஆ.மணிகண்டன், த. ஆசைத்தம்பி, கோ. நடராஜன், பிலாக்குறிச்சியைச் சோ்ந்த கி. நடராஜன், ம. இளையராஜா, வீராக்கன் கிராமத்தைச் சோ்ந்த சி. சம்பத், செதலவாடியைச் சோ்ந்த இரா. செல்வதுரை, நாகல்குழியைச் மு. கொளஞ்சியப்பா ஆகியோா் தலைமை வகித்தனா். விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.