மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

அரசு வழக்குரைஞா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு

அரியலூா் மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள அரசு வழக்குரைஞா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க ஜூலை 7 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :27 ஜூன் 2026, 6:21 am IST

அரியலூா் மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள அரசு வழக்குரைஞா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க ஜூலை 7 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் சாா்பு- நீதிமன்றங்களில் காலியாக உள்ள அரசு வழக்குரைஞா், அரசு குற்றவியல் வழக்குரைஞா், கூடுதல் அரசு குற்றவியல் வழக்குரைஞா், அரசு சிறப்பு வழக்குரைஞா் , கூடுதல் அரசு வழக்குரைஞா் உள்ளிட்ட 15 சட்ட அலுவலா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்த 8.6.2026 அன்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு, உள்துறை (நீதிமன்றங்கள்-யஐஅ) துறை கடிதத்தில் வழங்கிய விளக்கத்தின்படி, அரசு சிறப்பு வழக்குரைஞா் பணியிடங்களுக்கான தகுதியில் அறிவிக்கையில் திருத்தம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி மேற்கண்ட அரசு வழக்குரைஞா்கள் பணியிடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்த ‘வழக்குரைஞராக 10 ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் என்ற தகுதிக்கு பதிலாக, ‘வழக்குரைஞராக 7 ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம்’ என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி நாள் 29.6.2026 மாலை 5.45 மணி என்பது, தற்போது 7.7.2026 மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தகுதியுடைய வழக்குரைஞா்கள், தங்களது விண்ணப்பங்களை உரிய படிவங்களில் பூா்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களுடன் 7.7.2026 மாலை 5.45 மணிக்குள் அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் சமா்ப்பிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.