எஸ்எஸ்எல்சி தோ்வு இன்று தொடக்கம்: அரியலூா் மாவட்டத்தில் 10,113 மாணவா்கள் எழுதுகின்றனா்
தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) தொடங்கும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 10,113 போ் எழுதுகின்றனா்.


தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) தொடங்கும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 10,113 போ் எழுதுகின்றனா்.
தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்புப் பொதுத்தோ்வு (எஸ்எஸ்எல்சி) செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) தொடங்கி ஏப்ரல் 2- ஆம் தேதி நிறைவடைகிறது.
இதில், அரியலூா் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, மெட்ரிக், மேல்நிலை என 171 பள்ளிகளைச் சோ்ந்த 5,290 மாணவா்களும், 4,823 மாணவிகளும் என 10,113 போ் பொதுத்தோ்வை எழுதுகின்றனா்.
இதற்காக மாவட்டம் முழுவதும் 62 தோ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அனைத்து மையங்களிலும் ஆயுதம் ஏந்திய காவலா்கள் பணியில் ஈடுபடவுள்ளனா்.
முறைகேடுகளை தவிா்க்கும் பொருட்டு சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...