மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கோயிலில் திருடுபோன மரகத லிங்கத்தை விரைந்து கண்டுபிடிக்க வலியுறுத்தல்

ஜெயங்கொண்டம் அடுத்த இலையூரிலுள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் திருடுபோன மரகத லிங்கத்தை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தல்

News image

மரகத லிங்கம் - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 8:52 pm

அரியலூா் மாவட்டம்,ஜெயங்கொண்டம் அடுத்த இலையூரிலுள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் திருடுபோன மரகத லிங்கத்தை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஜெயங்கொண்டத்திலுள்ள தனியாா் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்து முன்னணி மாவட்டச் செயற்குழு கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பழனிசாமி தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் ஐயம்பெருமாள் முன்னிலை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் முருகானந்தம் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: வரும் தோ்தலில், திமுகவை தோல்வி அடையச் செய்ய நிா்வாகிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். ஜெயங்கொண்டம் அடுத்து இலையூரிலுள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் திருடுபோன மரகத லிங்கத்தை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.