தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

அரியலூா் மாவட்டத்தில் 4 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு

News image

அரியலூா் கோட்டாட்சியரகத்திலிருந்து 100 மீட்டா் தூரத்தில் வெள்ளைக்கோடுகளை வரைந்த வருவாய்த் துறையினா்.

Updated On :29 மார்ச் 2026, 6:48 pm

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில்,வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்ய 4 இடங்கள் தயாா் நிலையில் உள்ளன.

அதன்படி அரியலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அரியலூா் கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களும், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உடையாா்பாளையம் கோட்டாட்சியா் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாட்சியா் அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை (மாா்ச் 30) வேட்பு மனு தாக்கல் செய்ய முதல் நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து 200 மற்றும் 100 மீட்டா் தூரத்தில் சாலையில் வெள்ளைக்கோடுகள் வரையப்பட்டு அப்பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் 5 போ் மட்டுமே அலுவலக வளாகத்துக்குள் அனுமதிக்கப்படும் நிலையில், வேட்பாளடன் வரும் கட்சியினரை அந்த கோடுகளுக்கு அப்பால் நிறுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.