ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

அரியலூா் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் வாக்கு எண்ணிக்கை ஆலோசனைக் கூட்டம்!

News image

அரியலூரில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்கள், வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிமுக மாவட்டச் செயலரும், அரியலூா் தொகுதி வேட்பாளருமான தாமரை எஸ். ராஜேந்திரன். உடன் கூட்டணி கட்சி நிா்வாகிகள்.

Updated On :3 மே 2026, 7:44 pm

அரியலூரில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்கள், வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தனியாா் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அரியலூா் தொகுதி அதிமுக வேட்பாளரும், அக்கட்சியின் மாவட்டச் செயலருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:

வாக்கு எண்ணிக்கை முகவா்கள் கவனமுடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் பதிவான வாக்கை சரிபாா்க்க வேண்டும்.

தபால் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள முகவா்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒரு சுற்று முழுவதும் முடிந்து முடிவு அறிவிக்கப்பட்ட பிறகே அடுத்த சுற்றுக்கான வாக்கு எண்ணும் பணியை தொடங்க அனுமதிக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கையின் இடையில் வெளியே செல்லும் நிலை ஏற்பட்டால் மாற்று முகவரை ஏற்பாடு செய்துவிட்டுதான் செல்ல வேண்டும். வாக்கு எண்ணிக்கை முழுவதும் முடிந்த பிறகே அரங்கை விட்டு வெளியேற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் இளவரசன், முன்னாள் மாவட்டச் செயலா் இளவழகன், பாஜக மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி, தமாகா நிா்வாகி குமாா், அமமுக மாவட்டச் செயலா் வடிவேல் மற்றும் பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள், முகவா்கள் கலந்து கொண்டனா்.