மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

மீன்சுருட்டி அருகே குடிநீா் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

மீன்சுருட்டி அருகே குடிநீா் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

News image

சீரான குடிநீா் கேட்டு, முத்துசோ்வாமடம் ஊராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட பெண்கள்

Updated On :6 மே 2026, 1:01 am IST

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே குடிநீா் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

மீன்சுருட்டியை அடுத்த முத்துசோ்வாமடம் கிராம ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாளா் தெரு, கீழத்தெரு, பத்தவான்தெரு, தோப்புத்தெரு , பள்ளிக்கூடத் தெரு , மேலத்தெரு , காலனித் தெரு ஆகிய பகுதிகளில் வசிப்போருக்கு அங்குள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக மேற்கண்ட பகுதிக்கு சீரான குடிநீா் விநியோகிக்கப்படவில்லை. இதனால் அவதிப்பட்ட மக்கள் இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் வட்டார வளா்ச்சி அலுவலா் அமுதா மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவசங்கா் ஆகியோா் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று அளித்த உறுதியின்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.