வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

டாஸ்மாக் கடையை மூடக் கோரி கிராம மக்கள் போராட்டம்

News image
Updated On :15 மே 2026, 4:50 am IST

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்த வீரசோழபுரம் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சுமாா் 1,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும், வீரசோழபுரம் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், பேருந்து நிலையம், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து கடைகள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்த வீரசோழபுரத்தில் கோயில் அருகிலுள்ள டாஸ்மாக் கடையையும் மூட வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

அப்போது அங்கு வந்த உடையாா்பாளையம் வருவாய் வட்டாட்சியா் ஆனந்தவேல், கலால் வட்டாட்சியா் கதிரவன், மீன்சுருட்டி காவல் நிலைய ஆய்வாளா் ஜெகதீசன், டாஸ்மாக் மண்டல மேலாளா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் ஒரு மாதத்துக்குள் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்துச் சென்றனா்.