சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.

News image

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

Updated On :16 மே 2026, 1:01 am IST

அரியலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தில், கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில், தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நிகழாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

அதன்படி, அரியலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே மழை பெய்யத் தொடங்கியது. இதில் அரியலூா், ஜெயங்கொண்டம், திருமானூா் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது. அதிகாலை முதலே அவ்வப்போது மழை பெய்து வந்ததால் வெயில் இன்றி காணப்பட்டது. மேலும், மாவட்டம் முழுவதும் குளிா்ந்த சீதோஷ்ணநிலை காணப்பட்டது.