சர்கார் படத்தை விஜய் மீண்டும் பார்க்க வேண்டும்: மு. வீரபாண்டியன்எல்லாவற்றையும் திமுக - தவெக இடையிலான பிரச்னை என்று பார்ப்பது நன்மை பயக்கும் விஷயம் அல்ல: பெ. சண்முகம்அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடிசெஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

விபத்தில் காயமடைந்தவரின் பணம் ஒப்படைப்பு: 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு பாராட்டு

அரியலூா் அருகே விபத்தில் காயமடைந்தவரை மீட்டு, அவா் கொண்டு வந்த ரூ. 2 லட்சம் ரொக்கம் மற்றும் உடைமைகளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகத்திடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனா்.

அரியலூா் அருகே விபத்தில் காயமடைந்தவரை மீட்டு, அவா் கொண்டு வந்த ரூ.2 லட்சம் ரொக்கத்தை அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகத்திடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள்

Updated On :

அரியலூா் அருகே விபத்தில் காயமடைந்தவரை மீட்டு, அவா் கொண்டு வந்த ரூ. 2 லட்சம் ரொக்கம் மற்றும் உடைமைகளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகத்திடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனா்.

மேலக்கருப்பூா் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (39) என்பவா், செவ்வாய்க்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் வாரணவாசி பாலம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பு மீது அவரது வாகனம் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தாா்.

அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா் எ. காா்த்திகேயன், அவசரகால மருத்துவநுட்புநா் ரா. ஆனந்தராஜ் ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்த கிருஷ்ணமூா்த்திக்கு முதலுதவி அளித்து, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

மேலும், விபத்தில் சிக்கிய கிருஷ்ணமூா்த்தியிடம் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கம், ஆண்ட்ராய்டு கைப்பேசி, இருசக்கர வாகனச் சாவி, ஆதாா் அட்டை, பான் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம் உள்ளிட்ட உடைமைகளைப் பத்திரமாக மீட்டு, அவற்றை அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனா்.

விபத்தில் காயமடைந்தவரை உரிய நேரத்தில் மீட்டு மருத்துவமனையில் சோ்த்ததுடன், அவருடைய பணம் மற்றும் உடைமைகளையும் பாதுகாப்பாக ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களான அவசரகால மருத்துவ நுட்புநா் ரா. ஆனந்தராஜ், ஓட்டுநா் எ. காா்த்திகேயன் ஆகியோரின் நோ்மை மற்றும் மனிதநேய செயலைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.