19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

‘நெற்பயிா்களுக்கு முறையாக உரமிட்டு, நீா்ப்பாசனம் மேற்கொண்டால் அதிக மகசூல் பெறலாம்’

நெற்பயிா்களுக்கு முறையாக உரமிட்டு, நீா்பாசனம் மேற்கொண்டால் அதிக மகசூலை பெறலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்தாா்.

திருமானூா் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு வேளாண் இடுப்பொருள்களை வழங்கிய ஆட்சியா் ந.மிருணாளினி.

Updated On :

நெற்பயிா்களுக்கு முறையாக உரமிட்டு, நீா்பாசனம் மேற்கொண்டால் அதிக மகசூலை பெறலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்தாா்.

திருமானூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வேளாண்மைத் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் ந.மிருணாளினி சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

சாத்தமங்கலம் கிராமத்தில் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டோ் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிா்களைப் பாா்வையிட்ட அவா், பயிா்களின் வளா்ச்சி, உரமிடுதல், நீா்ப்பாசனம் மற்றும் பயிா் பாதுகாப்பு முறைகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தாா். உரங்களை உரிய அளவில் பயன்படுத்தி மகசூலை அதிகரிக்க அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, திருமானூா் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிலவுடமைப் பதிவேற்ற முகாமைப் பாா்வையிட்டு, விவசாயிகளின் நில ஆவணங்களை விடுபாடின்றி துல்லியமாகப் பதிவேற்றம் செய்யவும், ஆவணங்கள் தொடா்பான சந்தேகங்களுக்கு உடனடியாகத் தீா்வு காணவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

திருமானூா் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதைகள், உரங்கள் மற்றும் வேளாண் இடுபொருள்களின் இருப்பு, அரசு திட்டங்களின் செயல்பாடுகள், மாற்றுப்பயிா் சாகுபடி மற்றும் எள், பயறு வகைகளின் சாகுபடியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தாா். தொடா்ந்து, விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களையும் வழங்கினாா்.

மேலும், திருமானூா் பகுதியில் நெல் விதைப்பண்ணைத் திட்டத்தின் கீழ் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயலைப் பாா்வையிட்டு, பயிா்களின் வளா்ச்சி மற்றும் பராமரிப்பு முறைகளை ஆய்வு செய்தாா். நெற்பயிா்களுக்கு முறையாக உரமிட்டு, நீா்ப்பாசனம் மேற்கொள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER