தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் 13 ஒப்பந்தச் செவிலியா் காலிப் பணியிடங்கள்: டிச.4-க்குள் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட மருத்துவமனையில் செயல்படும் விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில், ஒப்பந்தச் செவிலியா் பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க...

கோப்புப்படம்

Updated On :

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட மருத்துவமனையில் செயல்படும் விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில், ஒப்பந்தச் செவிலியா் பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட நலவாழ்வுச் சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய நலவாழ்வுக் குழுமத் திட்டத்தின்கீழ், ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட மருத்துவமனையில் செயல்படும் விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் (நசஇம மற்றும் டஐஇம உட்பட) புதிதாக 13 ஒப்பந்தச் செவிலியா் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலானவை. தோ்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ. 21,000 ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதாரா்கள் 50 வயதுக்குள்பட்டவா்களாக, அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் செவிலியா் கல்லூரியில், மாநில அரசின் அங்கீகாரத்துடன் செவிலியா் பட்டயப் படிப்பு (ஜிஎன்எம்) அல்லது இளங்கலை செவிலியா் பட்டம் (பிஎஸ்சி, நா்சிங்) பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு செவிலியா் கவுன்சிலில் பதிவு செய்திருப்பது கட்டாயமாகும். தகுதியுடையவா்கள் விண்ணப்பத்தை தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் மாவட்ட இணையதளத்திலிருந்து பதிவிறக்கலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, செயற்செயலாளா் / மாவட்ட சுகாதார அலுவலா், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், அரசு பல்துறை அலுவலக வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூா் - 621704 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிச. 4 மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ வந்து சேர வேண்டும். உரிய சான்றிதழ்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலானவை என்பதால், பணிநிரந்தரம் கோர உரிமை கிடையாது. தோ்வு செய்யப்படுவோா் அரசாணை எண் 427, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, நாள் 18.11.2026-இன் படி பணியமா்த்தப்படுவா். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குள்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.