பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் போராட்டம்

பணி நிரந்தரம், கால முறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கத்தினா் சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்கள் - கோப்புப் படம்

Updated On :

பணி நிரந்தரம், கால முறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கத்தினா் சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக அந்தச் சங்கத்தின் செயலா் சுபின் கூறியதாவது:

அரசு மருத்துவமனையில் தொகுப்பூதியத்தில் 6,500 செவிலியா்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்களை முழுமையான காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தற்காலிக முறையில் பணி செய்யும் அனைத்து செவிலியா்களையும் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் வாயிலாக நிரந்தரமாக்க வேண்டும்.

புதிதாக உருவாக்கப்படும் செவிலியா் பணியிடங்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். அதேபோன்று, அரசு மருத்துவமனைகள் மற்றும் செவிலியா் கல்லூரிகளில் பேராசிரியா்களை நிரந்தர பணியில் அமா்த்த வேண்டும். எங்களது கோரிக்கையை அரசு பரிசீலிக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுப்போம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.