மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த குழு அமைக்க வேண்டும்: ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தல்

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த, வணிகா்கள், விவசாயிகள், அரசு அலுவலா்களைக் கொண்ட குழுவை முதல்வா் ஜோசப்விஜய் உடனடியாக அமைக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்தாா்.

அரியலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா. உடன் சங்க நிா்வாகிகள்.

Updated On :

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த, வணிகா்கள், விவசாயிகள், அரசு அலுவலா்களைக் கொண்ட குழுவை முதல்வா் ஜோசப்விஜய் உடனடியாக அமைக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்தாா்.

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

பண்டிகை காலம் வருவதால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், வியாபாரிகளை அச்சுறுத்தாமல் தங்கள் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அரியலூா் பேருந்து நிலையத்தில் திறக்கப்படாமல் உள்ள கடைகளை விரைந்து வாடகைக்கு விட்டு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

ஆயுதபூஜை , தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் இரவு 10 மணிக்கே கடையைப் பூட்ட சொல்லி வியாபாரிகளை வற்புறுத்தக் கூடாது. கடை நடத்தும் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.

பட்டாசு வியாபாரிகளுக்கான சான்றிதழ்களை விரைந்து வழங்கி, வியாபாரிகள் வணிகம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் வா்த்தகம் மற்றும் காா்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதால் சிறு வியாபாரிகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனா். எனவே, சிறுவியாபாரிகளை பாதுகாக்க உடனடியாக சிறப்புப் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும்.

விலைவாசி உயா்வுக்கு மிகப்பெரிய காரணமே வறட்சிதான். கோடிகளைக் கொட்டி தரும் இலவசங்களை தவிா்த்து, நீராதாரத்தை மேம்படுத்த அரசு முன்னுரிமை தர வேண்டும்.

தமிழ்நாட்டில் விலைவாசியை கட்டுப்படுத்த வணிகா் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், அரசுத்துறை அதிகாரிகளை அழைத்து உடனடியாக குழு அமைத்து ஆலோசனை கேட்க வேண்டும் என்றாா்.

சந்திப்பு நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். மண்டலத் தலைவா் தமிழ்ச்செல்வன், மாநில இணைச் செயலா் ஏ.ஆா். அமுதன், திருச்சி மாவட்டத் தலைவா் ஸ்ரீதா், மாவட்டச் செயலா் பாண்டுரெங்கன், ராஜஜெயராமன், மாவட்ட பொருளாளா் கந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.