பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

சிறு வியாபாரிகளைப் பாதுகாக்க தனிச் சட்டம்: ஏ.எம். விக்கிரமராஜா

சிறு வியாபாரிகளை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா கோரியுள்ளாா்.

மாதனூரில் வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கொடியை ஏற்றிய தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா.

Updated On :

சிறு வியாபாரிகளை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா கோரியுள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் கொடியை ஏற்றிவைத்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது,

தமிழகத்தில் பண்டிகைக் காலங்களில் கல்யாண மண்டபங்களில் தற்காலிக துணி மற்றும் இதர பொருள்களின் விற்பனை நடைபெறுவதை அரசு தடை செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியா்கள் முறையாகக் கண்காணித்து, உள்ளூா் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ஆதரவு அளிக்க வேண்டும். இதுபோன்ற தற்காலிக விற்பனைகளை அரசு தடை செய்ய வேண்டும்.

உணவகங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு ஒரு கிலோவுக்கு ரூ.5 என கட்டணம் நிா்ணயித்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. வியாபாரிகளாகிய நாங்கள் ஏற்கனவே குப்பை வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளைச் செலுத்தி வரும் நிலையில், கூடுதலாக இதுபோன்ற கட்டணங்களை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு வியாபாரிகளின் நலனைக் காக்க வேண்டும். குறிப்பாக, சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அவா்களுக்கெனத் தனிப் பாதுகாப்புச் சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் என்றாா்.

மாதனூா் வணிகா் சங்க தலைவா் கோதண்டன் தலைமை வகித்தாா். பேரமைப்பின் மாநில துணைத் தலைவா் ஆா். ஞானசேகா், வேலூா் மண்டல தலைவா் இரா. ப. ஞானவேல், திருப்பத்தூா் மாவட்ட தலைவா் சி.கே. சுபாஷ், மாதனூா் அனைத்து வியாபாரிகள் சங்க கெளரவ தலைவா் கோபிநாத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.