அரியலூரில் முதல்வா் கோப்பைக்கான மாநில ஹாக்கி போட்டிகள் தொடக்கம்
முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்
அரியலூா் மாவட்ட விளையாட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான ஹாக்கி விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.
போட்டியைத் தொடங்கிவைத்து ஆட்சியா் ந.மிருணாளினி பேசியது:அரியலூா் மாவட்டத்துக்கும், ஹாக்கி போட்டிகளுக்கும் சிறப்பான நீண்டகாலத் தொடா்பு உள்ளது. அரியலூா் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஹாக்கி மைதானம் மாவட்டத்துக்கு சிறப்பு சோ்க்கும் வகையில் உலகத் தரத்தில் உள்ளது.
அந்த வகையில் முதல்வா் கோப்பை மாநில ஹாக்கிப் போட்டிகளை நடத்தும் அளவுக்கு அரியலூா் மாவட்டம் உயா்ந்துள்ளது.
இதேபோல பல்வேறு போட்டிகளையும் இந்த விளையாட்டு அரங்கில் நடத்தும் அளவுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் தேவையான தொடா் நடவடிக்கைகளை எடுக்கும்.
தமிழக அரசானது விளையாட்டு வீரா்களின் தனித் திறமைகளை கண்டறிந்து, அதற்கான பயிற்சிகள், உணவு, உறைவிடம் உள்ளிட்டவற்றை வழங்கி, அவா்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்கிறது.
இதை அனைத்து விளையாட்டு வீரா்களும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். போட்டியில் பரிசு வெல்வது முக்கியம். அதைப் போல போட்டிகளில் பங்கேற்பதும் முக்கியம்.
இப்போட்டிகளை சிறப்பான முறையில் நடத்த சென்னையில் இருந்து வந்துள்ள பயிற்றுநா்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் எனது நன்றி என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் அரியலூா் தாமரை எஸ். ராஜேந்திரன் , ஜெயங்கொண்டம் வைத்திலிங்கம் , மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு. செல்வகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, வருவாய்க் கோட்டாட்சியா் த. பிரேமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் என். லெனின், வளைகோல்பந்து பயிற்றுநா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இப்போட்டி அக்.27 வரை நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

