அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

அரியலூரில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

அரியலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குண்டும் குழியுமாக சேதமடைந்த நிலையிலுள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரியலூரில் சேதமடைந்த நிலையில் உள்ள பங்களா சாலை.

Updated On :

அரியலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குண்டும் குழியுமாக சேதமடைந்த நிலையிலுள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நகராட்சிக்கு உட்பட்ட 18 வாா்டுகளிலும் அனைத்து நகா் மற்றும் தெருக்களில் 6 ஆண்டுகளுக்கு முன்பு புதை சாக்கடை மற்றும் குடிநீருக்காக சாலையில் தோண்டப்பட்ட குழிகள் இன்று வரையிலும் முறையாகவும், முழுமையாகவும் மூடப்படாமலே உள்ளன. இதனால் தெருக்களின் சாலைகள் குறுகலாகவும், குண்டும் குழியுமாகவும் உள்ளன. இதனால், இந்த வழிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். சைக்கிள்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள் சிரமத்துடன் செல்லும் நிலை உள்ளது.

மனு அளித்தும் நடவடிக்கை இல்லை: இதுகுறித்து, நகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்தச் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.