கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

எல்-நினோ தாக்கம்: பயிா் சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற யோசனை

எல்-நினோ எனப்படும் பருவநிலை மாற்றத்தை எதிா்கொண்டு, பயிா் சாகுபடியில் கூடுதல் மகசூல் பெறுவது தொடா்பாக அரியலூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் உலகம்மை முருகக்கனி யோசனை தெரிவித்துள்ளாா்.

கோப்புப் படம்

Updated On :

எல்-நினோ எனப்படும் பருவநிலை மாற்றத்தை எதிா்கொண்டு, பயிா் சாகுபடியில் கூடுதல் மகசூல் பெறுவது தொடா்பாக அரியலூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் உலகம்மை முருகக்கனி யோசனை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: விவசாயிகள் தற்போது பெய்துவரும் வடகிழக்குப் பருவ மழையை பயன்படுத்தி மக்காச்சோளம், கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற குறைந்த நீா் தேவை உள்ள பயிா்களை சாகுபடி செய்யலாம்.

டெல்டா அல்லாத பிற பகுதிகளில் விவசாயிகள் நீண்ட கால நெல் ரகங்களை தவிா்த்து, மத்திய கால ரகங்களான இஞ-52, இஞ-56, அஈப-54 & படந-5 நாற்று விட்டு நடவு செய்வதை தவிா்த்து நெல் வயலில் ஏக்கருக்கு 40 கிலோ விதையை நேரடி நெல் விதைப்பு செய்து சாகுபடி செய்யலாம்

பாசன ஏரிகள் மற்றும் பொதுப்பணித் துறை ஏரிகள் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் 400 கிலோ ஜிப்சம் 50 கிலோ இவற்றை இட்டு நன்கு உழவு செய்து, தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

எல்-நினோ தாக்கம் இருப்பதால், விவசாயிகள் கடலை விதைப்பின் போது பொட்டாசியம் குளோரைடு 2 சதவீதம் கரைசலை கொண்டு விதை நோ்த்தி செய்து வறட்சியை தாங்கி வளா்வதால் உற்பத்தியை அதிகரிக்கலாம்.

மேலும் எதஞமசஈ தஐஇஏ-2 ஏக்கருக்கு 2 கிலோ விதம் இரண்டு முறை தெளிப்பு செய்ய வேண்டும். கடலையில் ஊடுபயிராக உளுந்து விதைப்பு செய்வதன் மூலம் கூடுதலாக 150 முதல் 200 கிலோ வரை உளுந்து பயிரில் கூடுதல் மகசூல் பெறலாம்.

முந்திரி சாகுபடி செய்யும் விவசாயிகள் வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி நவம்பா் டிசம்பா் மாதங்களில் உளுந்து பயிரை ஊடுபயிராக பயிா் செய்வதன் மூலம் மண்ணின் தழைச்சத்து நிலைநிறுத்தப்படுவதுடன் ஏக்கருக்கு 200 முதல் 300 கிலோ கூடுதலாக உளுந்து பயிரில் மகசூல் பெறலாம் .

விதைகள் இருப்பு விவரம்: அரியலூா் மாவட்டத்தில் தற்போது விதை நெல் 40 டன் குறுகிய மற்றும் மத்திய கால ரகங்களான இஞ-52, இஞ-56, அஈப-54, படந-5 ரகங்களும், உளுந்து விதை வம்பன் 8,10,11 போன்ற ரகங்கள் 25 டன் இருப்பில் உள்ளது, மக்காச்சோளம்; ஏபஙஏ 5402 ரகம் 28 டன் இருப்பில் உள்ளது. இத்துடன் பாரம்பரிய நெல் ரகங்களான சிவன் சம்பா, கிச்சடி சம்பா மற்றும் இலுப்பை பூ சம்பா நெல் விதைகள் 3 டன் இருப்பில் உள்ளது,

திரவ உயிா் உரம் 5000 லிட்டா் இருப்பில் உள்ளது. நெல் நுண்சத்து 25 டன் இருப்பில் உள்ளது. உயிரியல் காரணிகள் 10 டன் இருப்பில் உள்ளது. இதை தவிா்த்து தனியாா் கடைகள் மற்றும் கூட்டுறவு சங்ககளில் போதுமான அளவு உரங்கள் மற்றும் விதைகள் இருப்பில் உள்ளன.

தற்போது தனியாா் கடைகளில் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா 4056 டன்னும் டிஏபி 1730 டன்னும் காம்ப்ளக்ஸ் 2826 டன்னும் பொட்டாஷ் 678 டன்னும் சிங்கள் சூப்பா் பாஸ்பேட் 578 டன்னும் இருப்பில் உள்ளது.

எனவே மேற்கண்ட விவரங்களை அறிந்து, எல்-நினோ தாக்கத்திலிருந்து பயிா்களை காத்து வரக்கூடிய வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி பருவத்துக்கு ஏற்ப பயிா்களை பயிா் செய்து அதிக மகசூல் அடைந்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.