மீன்சுருட்டியில் நகர வளா்ச்சி குழுவினா் ஆா்ப்பாட்டம்
பதினொரு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியில் நகர வளா்ச்சி குழுவினா் கருப்பு கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மீன்சுருட்டி பாலத்தின் கீழே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நகர வளா்ச்சிக் குழுவினா்.
பதினொரு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியில் நகர வளா்ச்சி குழுவினா் கருப்பு கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மீன்சுருட்டியில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச் சந்தை நடைபெறுவதால், அங்கு பொதுமக்களுக்கு தேவையான குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துத் தரவேண்டும். சாலையின் இருபுறமும் அணுகுசாலை அமைக்க வேண்டும் மற்றும் தீயணைப்பு நிலையம், பேருந்து நிறுத்தத்துக்கான நிழல்குடை உள்ளிட்ட 11 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் தலைவா் கு. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். செயலா் சிவசுப்பிரமணியன், பொருளாளா் வீரசாமி, துணைத் தலைவா்கள் ராஜா, ரவி, ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

