மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குஉலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்பணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

முறையற்ற உறவு: பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக இளைஞா் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே முறையற்ற உறவால் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பாலமுருகன்

Updated On :

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே முறையற்ற உறவால் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நானாங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பிச்சைப்பிள்ளை மனைவி ராஜேஸ்வரி (35). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் பிச்சைப்பிள்ளை தனது மனைவி ராஜேஸ்வரி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுவாராம். கடந்த 24-ஆம் தேதி தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜேஸ்வரி, திங்கள்கிழமை கீழப்பழுவூா் தோட்டக்கலைத் துறை பின்புறம் வாரியிலுள்ள ஒரு வேப்பமரத்தில், தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற கீழப்பழுவூா் காவல் துறையினா், சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சடலம் அருகில் தோண்டப்பட்ட குழியில் இருந்த நகைகள் ஆகியவற்றை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், ராஜேஸ்வரிக்கும், அவருக்கு ஆதாா் அப்பேட் செய்து தந்த அதே கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகனுக்கும் இடையே முறையற்ற உறவு இருந்ததாகவும், கடந்த 24-ஆம் தேதி ராஜேஸ்வரி, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு, பாலமுருகனுடன் திருப்பூா் செல்வதற்காக அரியலூா் பேருந்து நிலையத்துக்கு வந்ததாகவும், அங்கு பாலமுருகன், திருப்பூரில் தற்போது வேலை இல்லை, அங்கு குடும்பம் நடத்த முடியாது என்றும், ஆகையால் வீட்டுக்குச் செல்லுமாறு ராஜேஸ்வரிடம் கூறிவிட்டு புறப்பட்டு சென்ாகவும், ஆனால் ராஜேஸ்வரி வீட்டுக்குச் செல்லாமல் மேற்கண்ட இடத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா், ராஜேஸ்வரியை தற்கொலைக்கு தூண்டியதாக பாலமுருகனை புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.