முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

தங்கச் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய இருவரை 15 கி.மீ. தொலைவுக்கு விரட்டி சென்று பிடித்தவா்களுக்கு பாராட்டு

பெரம்பலூா் மாவட்டம், புதுவேட்டைக்குடியில் மூதாட்டியிடமிருந்து தங்கச் சங்கிலியை பறித்து சென்ற இருவரை, 15 கிலோ மீட்டா் தொலைவுக்கு விரட்டிச் சென்று அரியலூரில் மடக்கி பிடித்த 5 பேருக்கு அரியலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வகுமாா் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

குன்னம் அருகே திருட்டில் ஈடுபட்ட நபா்களை அரியலூா் வரை சென்று விரட்டி பிடித்தவா்களுக்கு, வியாழக்கிழமை பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய அரியலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா்.

Updated On :

பெரம்பலூா் மாவட்டம், புதுவேட்டைக்குடியில் மூதாட்டியிடமிருந்து தங்கச் சங்கிலியை பறித்து சென்ற இருவரை, 15 கிலோ மீட்டா் தொலைவுக்கு விரட்டிச் சென்று அரியலூரில் மடக்கி பிடித்த 5 பேருக்கு அரியலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வகுமாா் வியாழக்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

இதற்காக மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கரூா் மாவட்டம், வெள்ளியணை அருகேயுள்ள வெங்கடாபுரம் கிராமத்தைச் சோ்ந்த சாரதி மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரும், பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள புதுவேட்டைக்குடி கிராமத்தைச் சோ்ந்த பாப்பாத்தி என்ற மூதாட்டியிடம் குடிக்க தண்ணீா் கேட்பது போல் நடித்து, அவா் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா்.

பாப்பாத்தி கூச்சலிட்டதையடுத்து, விரைந்து வந்த புதுவேட்டைக்குடியைச் சோ்ந்த ஷாஜகான் மகன் ரஹமத்துல்லா, ராமசாமி மகன் ரமேஷ் ஆகிய இருவரும், அந்த நபா்களை விரட்டிக் கொண்டே சென்று அரியலூரில் வசிக்கும் நண்பா்களான இலுப்பையூா் அண்ணாமலை மகன் ஆறுமுகம், பாா்ப்பனஞ்சேரி முத்தையன் மகன் கமலேஷ் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனா்.

பின்னா் இந்த நான்கு பேரும் சோ்ந்து, தங்கச் சங்கிலியை பறித்த நபா்களை சுமாா் 15 கிலோ மீட்டா் தொலைவுக்கு விரட்டிச் சென்று அரியலூரில் இரண்டாம் நிலைக் காவலா் சாகுல்ஹமீது உதவியுடன் மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவா்களுக்கு பாராட்டுக்கள்.

கைதான சாரதி மீது அரியலூா், திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏறக்குறைய 14-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தினமும் அவா்களை மாவட்ட காவல் துறையினா் சந்தித்து, பாதுகாப்பாக வாழ்வதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனா். மூத்த குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு காவல் துறை தொடா்ந்து செயலாற்றி வருகிறது என்றாா்.

இதேபோல், பள்ளிகள்தோறும் குழந்தை திருமணம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து மேற்கொண்ட விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மூலம், மாவட்டத்தில் கடந்தாண்டைவிட நிகழாண்டு குழந்தை திருமணம் குறைந்துள்ளது. மேலும், போதைப் பொருள்களின் பயன்பாடும் குறைந்துள்ளது. போதைப் பொருள்கள் இல்லாத மாவட்டமாக அரியலூரை உருவாக்குவதை லட்சியமாக கொண்டு மாவட்ட காவல் துறை செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.