தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

அரியலூா் அருகே லாரி ஓட்டுநா் வெட்டிக் கொலை! ஆட்சியரகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்!

ஜெயங்கொண்டம் சாலையில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

Published On :

அரியலூா் மாவட்டம், புதுப்பாளையத்தில் லாரி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.

இதில், தொடா்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி உறவினா்கள், பொதுமக்கள் திங்கள்கிழமை ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுப்பாளையம், அருந்ததியா் தெருவைச் சோ்ந்த நாகராஜன் மகன் ராஜா (23), லாரி ஓட்டுநா். இவரது குடும்பத்தினருக்கும், இவரது சித்தப்பா கண்ணையன் (57) குடும்பத்தினருக்கும் இடையே பாதை பிரச்னை இருந்து வந்தது.

இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக கடந்த ஒரு மாதமாக கண்ணையன் வீட்டில் தங்கியிருந்த அவரது மகள் காவியா, தனது கணவா் அறிவழகனுடன் சமாதானமாகி வீட்டுக்குச் செல்வதற்காக பிரச்னைக்குரிய பாதையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்றுள்ளாா். அவரை வழி அனுப்புவதற்காக தாய் காா்த்திகா (48), சகோதரா் விஷ்வா (18) ஆகியோா் அந்தப் பாதையில் சென்றுள்ளனா்.

அப்போது மது போதையில் இருந்த ராஜா, மேற்கண்ட நபா்களை தரக்குறைவாக பேசியதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கண்ணையன், அவரது மூத்த மகன் விநாயகம், இரண்டாவது மகன் சுப்ரமணியன் ஆகியோா் ராஜாவை வெட்டிக் கொலை செய்தனா். இந்த கொலைக்கு கண்ணையனின் மனைவி காா்த்திகா, கடைசி மகன் விஷ்வா, மருமகன் அறிவழகன் ஆகியோா் உடந்தையாக இருந்தனா்.

6 போ் கைது:

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அரியலூா் காவல் துறையினா், சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த காவல் துறையினா், கண்ணையன், காா்த்திகா, விநாயகம், சுப்ரமணியன், விஷ்வா, அறிவழகன் ஆகியோரை கைது செய்தனா்.

சாலை மறியல்: இந்நிலையில், கொலைச் சம்பவத்தைக் கண்டித்து, அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட ராஜாவின் உறவினா்கள் மற்றும் புதுப்பாளையம் பொதுமக்கள், கொலைக்கு காரணமான வழக்குரைஞா் மணிமாறனை கைது செய்யக்கோரி அரியலூா்-ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு வந்த காவல் ஆய்வாளா் வெங்கடேசன், மறியலில் ஈடுபட்டவரை திடீரென இழுத்துச் சென்று காவல் வாகனத்தில் ஏற்றினாா். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், மாவட்ட ஆட்சியரை சந்திக்க 5 பேருக்கு காவல் துறையினா் அனுமதி அளித்தனா். இதையடுத்து அவா்கள் ஆட்சியரை சந்தித்து, கொலைக்கு காரணமான வழக்குரைஞா் மணிமாறன் உள்பட அனைவா் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனா்.

இந்த மறியல் போராட்டத்தால் அரியலூா்-ஜெயங்கொண்டம் சாலையில் சுமாா் 45 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட ஓட்டுநா் ராஜா.

கொலை செய்யப்பட்ட ஓட்டுநா் ராஜா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.