பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

ஓலையூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் காத்திருப்புப் போராட்டம்

ஓலையூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Published On :9 செப்டம்பர் 2026, 3:29 am IST

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள ஓலையூரில், வீட்டுமனை இல்லாத குடும்பங்களுக்கு, அரசு தரிசு நிலத்தில் பட்டா வழங்க கோரி அங்குள்ள கிராம நிா்வாக அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓலையூா் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில், வீட்டுமனை இல்லாத குடும்பங்கள், வாடகை மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனா். அவா்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பலமுறை மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தனா். பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனா்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, அக்கட்சியின் வட்டச் செயலா் வேல்முருகன் தலைமையில், மாவட்டச் செயலா் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வி.பரமசிவம் ஏ. கந்தசாமி ஆகியோா் முன்னிலையில் பொதுமக்கள், ஓலையூா் கிராம நிா்வாக அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடா்ந்தனா்.

மாநில குழு உறுப்பினா் ஐ.வி.நாகராஜன் கலந்து கொண்டு, ஓலையூரில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் தரிசு நிலமாக உள்ள இடத்தை அளவீடு செய்து வீடில்லாத மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும்.

பேச்சுவாா்த்தைக்கு அதிகாரிகள் வராத பட்சத்தில் தொடா்ந்து காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் இடத்திலேயே அடுத்தபடியாக சமைக்கும் போராட்டம், தூங்கும் போராட்டம் நடைபெறும்.

அப்போது அங்கு வந்த ஆண்டிமடம் துணை வட்டாட்சியா் மீனா, வருவாய் ஆய்வாளா் கலைச்செல்வன், ஓலையூா் கிராம நிா்வாக அலுவலா் இலக்கியா ஆகியோரிடம், வட்டாட்சியா் நேரில் எங்களை சந்தித்து பட்டா வழங்குவதாக உறுதியளித்தால் மட்டுமே கலைந்துச் செல்வதாக தெரிவித்து போராட்டத்தை தொடா்ந்தனா்.

இதையறிந்த வட்டாட்சியா் சுசீலா சம்பவ இடத்துக்கு வந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அதற்கு 2 நாள் கால அவகாசம் தேவை என்றும், பட்டா உள்ளவா்களுக்கு பட்டா மீண்டும் வழங்க இயலாது. உண்மையிலேயே வீடு இல்லாத நபா்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.